தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநிலப் புரவலராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சென்னையில் பாரத சாரண, சாரணியர் இயக்ககத்திற்கு புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை இன்று (மே 27) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மாநிலத்தின் மாணவர்களிடையே தன்னார்வத் தொண்டு, ஒழுக்கம் மற்றும் வீர தீர செயல்களை ஊக்குவிக்கும் தலைவராக ராஜ்மோகன் இனி செயல்படுவார்.