வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கும், லாக்கர்களில் நகைகள் வைத்திருப்போருக்கும் புதிய வாரிசு நியமன விதி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்பு நாமினியாக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும் என்ற நிலையில், இனி வாரிசுதாரராக நான்கு பேர் வரை நியமிக்கலாம். மேலும், ஒரு வங்கிக் கணக்கில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்படாமல் இருந்தால், அந்தத் தொகையை ரிசர்வ் வங்கியே விழிப்புணர்வு நிதிக்கு எடுத்துக்கொள்ளும் என்ற விதிமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.