பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறைப்படி, ஒருவரின் பிறப்பை 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யாவிட்டால் இனி மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் முறையீடு செய்தே பதிவு செய்ய முடியும். அதேபோல, ஒருவரின் இறப்பை 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய தவறினால், நீதித்துறை நடுவரிடம் முறையிட்டு அவரின் உத்தரவை பெற்ற பின்னரே பதிவு செய்ய இயலும்.