சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளனர். முள்ளிக்குப்பம் சமூக நலக்கூடத்தில் நேற்று மீனவர்களின் அவசர ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இன்று
போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இடதுசாரிகள், திமுகவும்
போராட்டம் அறிவித்துள்ளன.