ஹானர் நிறுவனம் சீன சந்தையில் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. 10,080mAh சிலிகான்-கார்பன் பேட்டரி, 6 ஆண்டு வாரண்டி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் முக்கிய அம்சங்களாகும். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 12GB RAM + 256GB மெமரி மாடல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,840 என்றும், 12GB RAM + 512GB மெமரி மாடல் ரூ.38,710 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.