தமிழகத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு இன்று (நவ.17) வெளியிட்டுள்ளது. இந்த நகரம், சென்னை அருகே செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ.301 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய நகரத்தில் கால்பந்து, ரோலர் ஸ்கேட்டிங், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, தடகள போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம் ஆகியவை அமையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.