தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர்
விஜய் கையெழுத்திட்ட "சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை" திட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் ஐடி நிறுவனப் பகுதிகளில் ரோந்து செல்லவுள்ள இப்படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடிப்படை போலீசாருக்கு நேவி ப்ளூ சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி மற்றும் பெல்ட் எனப் புதிய சீருடை தயாராகி வருகிறது.