சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நீதிமன்ற வழக்கு மற்றும் கடவுள் நம்பிக்கையை மையமாக கொண்டது. தேர்தலுக்கு பிறகு கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்றும், குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். வலிமை அப்டேட் போலவே ரசிகர்கள் ‘கருப்பு’ அப்டேட்டை எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார்.