தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தால், நீங்கள் இத்திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.