புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர விடுதிகளுக்கும் மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விடுதிகளுக்கு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து அவற்றின் விவரங்களை பதிவு செய்வதுடன், நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், காவல்துறை அனுமதி வழங்கிய குறிப்பிட்ட அரங்குகளில் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.