நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்செல் சாண்ட்னர் தலைமையிலான இந்த அணியில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கான்வே, மேட் ஹென்றி போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.