திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அடைந்ததாக தவெக தலைவர் விஜய், பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என விமர்சித்துள்ளார்.