2025 ஐஏஎஸ் தேர்வில் வென்று தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அலுவலர்கள் இன்று (மே 19) முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது, அமன் திவாரி, சித்தார்த் போக்கார்னா, மோனிகா, பவித்ரா, நந்தனா, பாட்டீல் குருஸ்னா பப்ருவன், ஸ்ரீ ரூசட், சுபாஷ்கார்த்திக், ராகுல் ராகவன், துஷார் சிங், சாய்சைதன்யா ஜாதவ் ஆகியோர் முதலமைச்சருடன் உரையாடினர்.