இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை, புதுமண ஜோடி மற்றும் பெண் ஒருவர் தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர். பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் நிலைதடுமாறிய அந்த நபரை நோக்கி, அவர்கள் தங்களின் துப்பட்டாவை கயிறு போல் நீட்டி பிடிக்குமாறு வீசியுள்ளனர். துப்பட்டாவை பிடித்து கொண்ட அந்த நபரை, அனைவரும் ஒன்றுசேர்ந்து பாதுகாப்பாக கரைக்கு இழுத்து மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.