திருவள்ளூரை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த பிப்.2ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்ற உதயகுமார், கடந்த 6ஆம் தேதி நண்பர்களை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திருபாததால் பவித்ரா அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. பின்னர் அவர் சாலையில் விழுந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.