கடலூரில் திருமணமாகி 2 மாதம் ஆனா நிலையில், 18 வயது புதுப்பெண் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல, அவர் 8 மாதம் கர்ப்பிணி என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் புகார் அளித்ததின் பேரில், புதுப்பெண்ணின் தாய்மாமன் லிங்கமுத்துவே இதற்கு காரணம் என தெரியவந்தது. வலிப்பு பிரச்சனையால் அக்காள் வீட்டில் தங்கிய அவர், ஆசை வார்த்தைகளால் பலமுறை பாலியல் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. லிங்கமுத்து 3 மாதமாக கோமாவில் உள்ளார்.