சென்னை பல்லாவரத்தில் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆசை வார்த்தை கூறி கிளிண்டன் என்பவர் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த இளைஞருக்கு இன்று (நவ., 25) திருமணம் நடைபெற இருந்த நிலையில், அங்கு பணத்தை இழந்தவர்கள் திரண்டுள்ளனர். மண்டபத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த அந்த கிளிண்டனை, பாதிக்கப்பட்ட நபர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.