சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், மாதவரம் நெடுஞ்சாலை நிலையத்தில் இருந்து 819 மீட்டர் நீளத்திற்கு வெற்றிகரமாக சுரங்கம் தோண்டி 'நீலகிரி' இயந்திரம் மூலக்கடை நிலையத்தை வந்தடைந்தது. இதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்ட பணிகளில் இதுவரை மொத்தம் 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தங்களது பணிகளை சிறப்பாக நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.