
பிஎம் கிசான் 23-வது தவணை பணம் வரவில்லையா? உடனே இதை செய்யுங்கள்
மத்திய அரசு கடந்த ஜூன் 20 அன்று வெளியிட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 23-வது தவணை தொகை தங்களுக்கு இன்னும் வரவில்லை என சில விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். e-KYC முடிக்காதது, நில ஆவண சரிபார்ப்பு விடுபட்டது அல்லது வங்கிக் கணக்கு விவர பிழைகளே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தகுதியிருந்தும் பணம் வராதவர்கள் 1800-180-1551 என்ற எண்ணிலோ, CPGRAMS இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி விவரங்களை புதுப்பிக்கலாம்.





























