தேர்தல் காரணமாக நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்: பயணிகள் ஏமாற்றம்

3794பார்த்தது
தேர்தல் காரணமாக நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்: பயணிகள் ஏமாற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம், அவலாஞ்சி, பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட 5 சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் சுற்றுலா தலங்களுக்கு வெளியே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தொடர்புடைய செய்தி