மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ஏழு செல்போன்களை திருடிய மர்ம நபர், பொதுமக்கள் பிடியில் சிக்கி தர்ம அடி வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்த நிலையில், கூட்டத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.