கோவை: 69 வயது முதியவரை மிரட்டி ரூ. 22 லட்சம் மோசடி

73பார்த்தது
கோவை: 69 வயது முதியவரை மிரட்டி ரூ. 22 லட்சம் மோசடி
கோவை, துடியலூரைச் சேர்ந்த 69 வயதான சபாபதி என்பவர், மும்பை போலீஸ் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய மர்ம நபரால் 22 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், சபாபதியின் செல்போனுக்கு வந்த அழைப்பில், மும்பையில் நடந்த பண மோசடி வழக்கில் சபாபதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்காக அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதில் ஏமாந்த சபாபதி, நவம்பர் மாதம் வரை பல தவணைகளாக ரூ. 22 லட்சத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சபாபதி மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று (டிசம்பர் 27) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி