குன்னூர் - Coonoor

ஊட்டி: கீரைகளின் பயன்களை நன்கு அறிந்த பழங்குடியினர்–கலெக்டர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை தாங்கி, பழங்குடியினரின் பாரம்பரிய உணவு குறித்து தயாரிக்கப்பட்ட புகைப்பட புத்தகத்தை நேற்று வெளியிட்டார். நீலகிரியில் வாழும் 8 வகை பழங்குடியினரும் சிறுதானியம், கிழங்கு, கீரை போன்ற இயற்கை உணவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கீரைகளின் மருத்துவ குணங்களை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


நீலகிரி
Mar 05, 2026, 04:03 IST/உதகமண்டலம்
உதகமண்டலம்

ஊட்டி: ரூ. 70. 23 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா பணிகள் தொடக்கம்

Mar 05, 2026, 04:03 IST
ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ. 70. 23 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் 2024-25 சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 12. 33 கோடியில் பணிகள் ஆரம்பமாகின. குளங்கள், பூர்வீக தாவர சுத்திகரிப்பு திட்டுகள், மிதிவண்டி மற்றும் நடைபாதைகள், விழிப்புணர்வு கூடம், கேளிக்கை அரங்கம், வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலா வளர்ச்சிக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் துணைபுரியும்.