நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ரிச்மென்ட் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு சிறுத்தை குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேவாலா வனத்துறையினர், உயிரிழந்த குட்டிகளின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். கூடலூர் மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.