நீலகிரி: சிட்டுக்குருவிபாதுகாப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

67பார்த்தது
சர்வதேச சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு. 

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். 55 சதவீதம் காடுகளை கொண்டுள்ளது. இங்கு எண்ணிலடங்கா பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில் சில பறவை இனங்கள் தற்போது காண்பது அரிதாகி வருகின்றது. குறிப்பிடும்படியாக சிட்டுக்குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவைகள் அழிந்து வர முக்கிய காரணம் செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கண்ணுக்கு தெரியாத கதிர் வீச்சு என சொல்லப்படுகிறது. 

இந்த கதிர் வீச்சால் நகரங்களில் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சத்தம் கேட்பது குறைந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன் அதிகாலை வேளைகளில் நாம் கண் விழிப்பதே இந்த இனிமையான பறவைகளின் சத்தத்தில் தான் இருந்தது.

தொடர்புடைய செய்தி