கோவை: கோடநாடு கொலை: வாளையார் மனோஜுக்கு பிடிவாரண்டு

337பார்த்தது
கோவை: கோடநாடு கொலை: வாளையார் மனோஜுக்கு பிடிவாரண்டு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 24.04.2017 அன்று நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 248 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் ஆஜராகினர். ஆனால் வாளையார் மனோஜ் ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, வழக்கை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி