குன்னூர்: 12 மணி நேரம் போராடிய காட்டெருமை பலி

63பார்த்தது
குன்னூர்: 12 மணி நேரம் போராடிய காட்டெருமை பலி
குன்னூர், கேத்தி பாலாடா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நேற்று அதிகாலை ஒரு காட்டெருமை எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டது. எருமையின் வயிறு மற்றும் பின்னங்கால் பகுதி கழிவுநீரில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. உடனடியாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குந்தா வனத்துறையினர், காட்டெருமையை மீட்க பொக்லைன் இயந்திரம் பயன்படுத்த ரூ. 20,000 செலவாகும் என்றும், அந்த தொகையை மக்கள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

ஆனால், அப்பகுதி மக்களால் அந்த தொகையை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாததால், வனத்துறையினர் எருமையை மீட்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன் விளைவாக, சுமார் 12 மணி நேரம் கழிவுநீர் தொட்டியில் தவித்த காட்டெருமை, நேற்று மாலை 5 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி