கூடலூர் அருகே நாடுகாணி பண்ணையில் பாழடைந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில், நாற்று நடும் பணியில் இருந்த மலர்விழி, காஞ்சனா, சந்திரமதி ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். பல ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடங்கள் அகற்றப்படாததே விபத்துக்கு காரணம் என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.