கூடலூர்: ரூ. 7½ கோடியில் சாலை புதுப்பிப்பு பணி!

0பார்த்தது
கூடலூர்: ரூ. 7½ கோடியில் சாலை புதுப்பிப்பு பணி!
பல்வேறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, கூடலூரில் இருந்து கேரளா மாநில எல்லை வரை சாலை புதுப்பிப்பு பணி ரூ. 7½ கோடி மதிப்பில் விரைவாக நடைபெற்று வருகிறது. கூடலூர்–நாடுகாணி–கீழ்நாடுகாணி வழியாக 3½ கி. மீ தூரம் சாலை கடுமையாக சேதமடைந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கூடலூர் பழைய பேருந்து நிலையம் முதல் செம்பாலா வரை 1 கி. மீ தூர சாலையை மேம்படுத்த ரூ. 1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் பணிகள் தாமதமான நிலையில் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், சாலை புதுப்பிப்பு பணிகள் விரைவில் முடிவடைந்து, போக்குவரத்து சீராகும், என்றார்.

தொடர்புடைய செய்தி