ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

388பார்த்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கிளென்மார்கன், தாவரவியல் பூங்கா சுற்றுப்பகுதி, லவ்டேல், வென்லாக்டவுன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (மே 16) கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சில இடங்களில் பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மழையால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளிர்பரப்பு பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

தொடர்புடைய செய்தி