கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஒசட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக இரண்டு சிறுத்தைகள், குறிப்பாக ஒரு கருஞ்சிறுத்தை, இரவு நேரங்களில் கிராமத்திற்குள் உலா வருகின்றன. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கருஞ்சிறுத்தை வீடுகளின் வாசல் முன்பு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், கிராமத்தில் வசிக்கும் 100 குடும்பங்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை பால் வினியோகம் செய்யும் இளைஞர்கள் மீது தாக்குதல் நிகழலாம் என அஞ்சுகின்றனர். கிராம மக்கள், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட வனத்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.