கோத்தகிரி: கிரேன் மோதி அரசு பஸ் விபத்து: 6 பேர் காயம்

0பார்த்தது
கோத்தகிரி: கிரேன் மோதி அரசு பஸ் விபத்து: 6 பேர் காயம்
கோத்தகிரி–நெடுகுளா சாலையின் ராஜ்நகர் பகுதியில், தனியார் தோட்டத்தில் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றும் போது அரசு பஸ் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. சுண்டட்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர் மணி, கிரேன் ஆபரேட்டர் மனோஜின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கிரேனின் இரும்பு கொக்கி பஸ்ஸின் முன் கண்ணாடியை சேதப்படுத்தியதில் கண்டக்டர் ஜெகன் உட்பட சில பயணிகள் லேசாக காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் கோத்தகிரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மனோஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி