கோத்தகிரி: போலீஸ் ஜீப்பை கரடிகள் மறித்ததால் பரபரப்பு!

0பார்த்தது
கோத்தகிரி: போலீஸ் ஜீப்பை கரடிகள் மறித்ததால் பரபரப்பு!
கோத்தகிரி அருகே நேற்று இரவு 11.30 மணியளவில், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் ரோந்து வந்தபோது, 2 குட்டிகளுடன் வந்த தாய் கரடி ஒன்று சாலையில் மறித்து நின்றது. கரடியைக் கண்டதும் ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தி சைரன் ஒலியெழுப்பி விரட்ட முயன்றார். இதனால் பயந்த தாய் கரடி, வாகனத்தை நோக்கி முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு வந்தது. போலீசார் முகப்பு விளக்குகளை அணைத்ததும், கரடி குட்டிகளுடன் சாலையைக் கடந்து புதரில் மறைந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you