முதுமலை, மசினகுடி வனக்கோட்டத்தில் உள்ள மாயாறு அணைப் பகுதியில், நீர் பாசன கால்வாய் தடுப்பு கம்பிகளுக்கு இடையே ஒரு வயது மதிக்கத்தக்க பெண் புலிக்குட்டி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. வனச்சரகர் ராஜன் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆய்வு செய்து உடலை மீட்டனர். அணையில் சிக்கி அடித்து வரப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். புலிக்குட்டியை யாரேனும் வீசினார்களா என விசாரணை நடைபெறுகிறது.