நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக எல்லையோர கிராமங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்ரீ மதுரை ஊராட்சி மக்கள் 'ஊராட்சி மக்கள் பாதுகாப்பு இயக்கம்' உருவாக்கி, ரூ. 9½ லட்சம் நிதி திரட்டி, மாங்களாஞ்சி முதல் வடவயல் வரை 3½ கி. மீ தூரம் சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இதன் மூலம் நீண்ட கால காட்டு யானை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக இயக்கத் தலைவர் சி. கே. மணி தெரிவித்துள்ளார். மேலும், 2-வது கட்டமாக வடவயல் முதல் குனில் வயல் வரை 4 கி. மீ. தூரம் மின்வேலி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.