நீலகிரி: குன்னூரில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0பார்த்தது
நீலகிரி: குன்னூரில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் 'பசுமையை மீட்போம் – பூமியை காப்போம்' என்ற கோஷத்துடன் கன்னியாகுமரியில் தொடங்கிய பசுமை பயணத்தின் ஒரு பகுதியாக, குன்னூரில் தமிழக துறவியர் பேரவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரவை தலைவர் அமலி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை குன்னூர் வட்டார முதன்மை குரு அந்தோணிசாமி மற்றும் தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தொடங்கி வைத்தனர். அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சிம்ஸ் பூங்காவில் நிறைவடைந்த பேரணியில் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர். பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி