நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி காரணமாக வெப்பநிலை 0 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்திருந்த நிலையில், தற்போது வெயில் அதிகரித்தாலும் அதிகாலை குளிர் நடுங்க வைக்கும் அளவில் உள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் உறைபனி பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.