ஊட்டி: தெப்பக்காடு அருகே அரிசி லாரி கவிழ்ந்து விபத்து

362பார்த்தது
ஊட்டி: தெப்பக்காடு அருகே அரிசி லாரி கவிழ்ந்து விபத்து
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி நேற்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை, போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அரிசி மூட்டைகளை உடனடியாக வேறு வாகனத்திற்கு மாற்ற வனத்துறையினர் அறிவுறுத்தினர்.