பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது. தொடர்ந்து கிராமப்புறங்களில் உலாவும் காட்டு யானைகளால் அச்சமடைந்த பொதுமக்கள், யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரும் வனத்துறையினரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.