ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலையில் உள்ள செல்போன் கடையில் ஹெட்செட் மாற்றிக் கொடுக்கக் கோரி ஏற்பட்ட தகராறில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரிஷித் (32) என்பவர் இளம்பெண் உட்பட மூவர் மீது மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அப்துல் ஹக்கீம், ரஞ்சித் குமார் மற்றும் இளம்பெண் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டி மத்திய போலீசார் ரிஷித்தை நேற்று கைது செய்தனர்.