ஊட்டி: மின் கசிவால் கம்போஸ்டர் பகுதியில் தீ விபத்து

256பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தீட்டுக்கள் கம்போஸ்டர் பகுதியில் இன்று (மே 20) மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி