தெற்கு ரயில்வே நிர்வாகம், உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை இன்று (பிப்ரவரி 21) முதல் 5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இயக்கச் செலவுகள், பராமரிப்பு செலவுகள், ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளதால், வருவாய் இழப்பை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது, முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.