ஊட்டி: எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தங்க வேட்டை!

0பார்த்தது
நீலகிரி மாவட்டம் பந்தலூர்–தேவாலா சுற்றுவட்டாரங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் செயல்கள் அதிகரித்துள்ளன. உள்ளூர் இளைஞர்கள் கேரள குழுக்களுடன் இணைந்து பழைய சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான குழிகளை தோண்டி தங்க படிமங்களை எடுப்பதாக கூறப்படுகிறது. சுமார் 80-200 அடி ஆழ சுரங்கங்களில் மண், கற்கள் அரைத்து பாதரசம் பயன்படுத்தி தங்கம் பிரித்தெடுப்பதால் நீர்நிலைகள் மாசுபட்டு மனிதர்கள், வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவாலா காட்டிமட்டம் பகுதியில் புதிய குழிகள் அமைத்து பணிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ., தாசில்தார் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை நிலைமையை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி