ஊட்டி: வளர்ப்பு பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை: மக்கள் அச்சம்

2பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஒசட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக 2 சிறுத்தைகள் மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் வந்த சிறுத்தை, வளர்ப்பு பூனையை கவ்விச் சென்றது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் இரவில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.