ஊட்டி: நாயை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை

318பார்த்தது
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே எம். ஆர். சி அதிகாரிகள் குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடி இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி