நீலகிரி மாவட்டம் எருமாடு அருகே மடமூலா ஆதிவாசி காலனியைச் சேர்ந்த யசோதா (52) என்பவரை பணத்தகராறு காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், அவரது 3-வது கணவர் சந்திரன் (36)க்கு ஊட்டி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதியருக்கு சம்பளப் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பின்னர் உறவினர் வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சந்திரன் கல்லால் தாக்கியதில் யசோதா உயிரிழந்தார். எருமாடு போலீசார் வழக்குப்பதிந்து சந்திரனை கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில், நீதிபதி லிங்கம் ஆயுள் தண்டனையுடன் ரூ. 2, 000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.