ஊட்டி: கையில் விஷப்பாம்பை பிடித்து சென்றவர் கைது

268பார்த்தது
ஊட்டி: கையில் விஷப்பாம்பை பிடித்து சென்றவர் கைது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதிர்காடு பகுதியில் நேற்று விஷப்பாம்பை கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அந்த நபர் பாம்பை சாலையில் வீசிவிட்டு தப்ப முயன்றார். விசாரணையில் அவர் பிதிர்காடு பகுதியைச் சேர்ந்த சாதிக் அலி (46) என்பது தெரியவந்தது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், சாதிக் அலியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி