ஊட்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

54பார்த்தது
ஊட்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி தனது வீட்டில் வைத்து பாபுவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். 

இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். அச்சத்தில் சிறுமி யாரிடமும் கூறவில்லை. கடந்த அக்டோபர் 17-ம் தேதி பள்ளியில் சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோர், போலீசார் மற்றும் குழந்தைகள் நல பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எம். செந்தில்குமார், குற்றவாளி பாபுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 16,500 அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து பாபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி