நீலகிரி மாவட்டம் பிதற்காடு கைவட்டா பகுதியில் காட்டு யானை தாக்கி பலத்த காயமடைந்த சுகுமாரன், கோட்டத்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகுமாரனின் இந்த திடீர் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.