டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண், நீலகிரி மாவட்ட அரசு அதிகாரி ஒருவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ. 20 லட்சம் மோசடி செய்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகையில் லாபம் காட்டி நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பல தவணைகளில் பணம் பெற்றுள்ளார். பணம் திரும்பக் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட அதிகாரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.